சனி, 11 மார்ச், 2017

ஒரு கிழவனின் கதை இது !! மூன்றாம் மற்றும் iஇறுதிப் பகுதி !!




ஒரு கிழவனின் கதை இது !!

( மூன்றாவது மற்றும் இறுதிப்பகுதி )



உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்ற 

எனது உயிர்த்துடிப்புக்கும் மேலாக நான் 

உண்மையில் நேசித்து வரும் அன்புத்தமிழ் 

நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் எனது பணிவான,
நெஞ்சம் நிறைவான, இதயம் கனிந்திட்ட
அன்பு மட்டுமே நிறைந்திட்ட வணக்கங்களை 
உரியதாக ஆக்கிக்கொள்கிறேன்.

                        " ஒரு கிழவனின் கதை "

கடந்த நான்கு தினங்களுக்கும் மேலாக, எழுத 
நேரமின்றி இதுவரை இரண்டு பகுதிகளாக 
வெளிவந்த அந்த கதை, இன்றையதினம் இங்கே 
மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதியை அடைந்து 
உங்களின் பாராட்டுதல்களைப் பெற்றிடும் என்றே நான் நிச்சயம் நம்புகிறேன் அன்பர்களே. இந்தக் கதை எங்களது ஊரில் வாழ்ந்து செழித்து அதன் பின்வயோதிக காலத்தில், மிகவும் சலிப்படைந்த  ஒரு பெரியவர் திரு.பிச்சாண்டி என்பவரின் வாழ்க்கையை  அடிப்படையாகக் கொண்டும் அத்துடன் எனது சிந்தனை 
சிறகுகளையும் ஒன்றாகக் கலந்து நான் வரைந்திட்ட ஒரு சீரான, சிறப்பானதொரு ஓவியம்தான் இந்தக் கதை என்றால் அதுதான் உண்மை எனது அன்புத்தமிழ் நெஞ்சங்களே !! 

மறைந்த பிச்சாண்டி வாழ்ந்த காலத்தே
உண்மையிலே காட்டுக்கு அரசன் என்றழைக்கப்பட்ட சிங்கம் போலவே வாழ்ந்தார். ஆனால், அவரது விதி அன்னாரது வாழ்க்கையில் விளையாடியபின்பு அவரைப் போல அசிங்கப்பட்டு வாழ்ந்தவரும் எவரும் இல்லை 
என்பதை நான் இங்கே பதிவு செய்திடக்கடமைப்
பட்டுள்ளேன். 


சரி..அன்பு நேயர்களே..நாம் இப்போது 
இந்தக் கதையின் இறுதிப்பகுதிக்குள் செல்வோமா ?


ஆக, திரு பரந்தாமனின் விதி அவரது வாழ்க்கையில் ஏற்படுத்திய காயங்கள், அதனால் அவரது செல்வம்,செல்வாக்கு, இவை அத்தனையும் சரிந்து கீழேவீழ்ந்து 
சேர்த்து வைத்திருந்த அத்தனை செல்வங்களும் அவரை விட்டு நீங்கிய நிலையில், அவரது நிலை, எப்படி இருந்தது தெரியுமா அன்புத்தமிழ் நெஞ்சங்களே ?

ஆம்..யாருக்கும் தலைவணங்காது வாழ்ந்திருந்த அந்த சிங்கம், தற்போது, மனைவி, மகன், மற்றும் அன்பு மகள், ஆகியோரது அன்புக் கட்டுப்பாட்டுக்கு உள்ளாக அவரை அமரவைத்த பெருமை, அவரின் விதிக்கும், அவரைப்படைத்த பெருமைக்கு உரிய எல்லாம் வல்ல இறைவனையும் மட்டுமே சேரும்.

திருமண வயதை அடைந்திட்ட அவரது அன்பு மகள்,மற்றும் அவரது ஆசை மகன், இவர்களது திருமணம் இன்னபிற சடங்குகள் அத்தனையையும் திரு பரந்தாமன் 
அவர்களது வாழ்க்கைத்துணைவி திருமதி.ஜெகஜோதி அவர்களே தனது முழுப்பொறுப்பில் ஏற்று சிறப்பாக 
நடத்தி, ஒரு தந்தை, தனது பிள்ளைகளுக்கு செய்திட வேண்டிய அத்தனை கடமைகளையும், ஒரு கணவராக இருந்து வழிநடத்திட வேண்டியவர், விதியின் கொடும் செயலால் வழியிழந்து செயல்பட முடியாமல் கணவர் 
இருக்கிறாரே என்றெல்லாம் சிறிதும் கவலைப்படாமல்,அவரது மனைவி தானே தனது உற்றார்,தனது கணவரின் உற்றார் உறவினர் 
ஆகியோரின் சீரிய மேற்பார்வையில், ஒத்துழைப்பில் திரு.பரந்தாமன் ஆற்றிட வேண்டிய அத்தனை பொறுப்பு,கடமைகள், இவைகளை நிறைவேற்றி வைத்திட்ட சிறப்பு,
அவரதுதுணைவியார்  திருமதி.ஜெகஜோதி 
அவர்களையே சேரும். இப்படிப்பட்ட சூழலில், அன்பு மகளும் திருமணம் முடித்து 
வெளிநாடு சென்று அங்கே தனது அன்புக்கணவரோடுவாழத்தொடங்கிய சூழலில், திரு பரந்தாமனின் மகன் திரு.பைரவனுக்கும் பொறியாளர்: தகவல் தொடர்புத்துறை பட்டப்படிப்பு படித்து முடித்ததால், சென்னையிலேயே பணி ஆணை 
கிடைத்ததால், குடும்பத்தோடு நமது கதையின் நாயகன் திரு.பரந்தாமனின் சொந்தஊர் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, விடைபெற்று,அன்பு மனைவி,மகன், இவர்களோடுசென்னை மாநகரில் குடிபெயர்ந்திட வேண்டிய கட்டாய 
சூழலுக்குத் தள்ளப்பட்ட காரணத்தால், அவரும் வடக்கு நோக்கி பயணித்தார்.வளமான வாழ்வு கிடைத்தது அவருக்கு, அவரது பிள்ளைகள் மூலமாக கிடைத்தது என்பதே உண்மை ஆகும்.
சென்னைக்கு குடிபெயர்ந்த இரண்டொரு ஆண்டுகளில் திரு. பரந்தாமனின் அன்பு மகன் திரு.பைரவனின் திருமணமும் சீரோடும் சிறப்போடும் நடந்தேறியது. மகனும், மருமகளும் தனிக்குடித்தனம் சென்றிட, இப்போது திரு.பரந்தாமன் அவரது 
அன்பு மனைவி திருமதி ஜெகஜோதி இவர்கள் மட்டும் ஏற்கனவே இருந்த வீட்டில், நிம்மதியாக, வேளாவேளைக்கு உண்ண, வகை வகையாய், உடைகள் உடுத்த, அன்பு மகள்,மாப்பிள்ளை இவர்கள் ஆண்டிற்கொரு முறை இந்தியா 
வந்து கவனித்துக்கொள்ள, அன்பு மகன்,மருமகள் இவர்கள் வாரம் ஒருமுறை வந்து நலம் விசாரித்து காலை முதல் மாலைவரை இருந்து கவனித்துக்கொண்டு...இப்படியாக வயதான காலத்தில் திரு.பரந்தாமன் திருமதி ஜெகஜோதி 
இவர்களது இனிமையான வாழ்க்கை சென்று கொண்டிருந்த வேளையில் தான் கதாநாயகன் திரு.பரந்தாமன் அவர்கள் எதிர்பாராமல் 
ஒரு சிறு அதிர்ச்சி சம்பவத்தை சந்திக்க நேரிட்டது. அதனால் மனம் வெறுப்படைந்த அவர் என்ன செய்தார் ? எங்கே போனார் ?

இதுதான் இந்தக்கதையின் உச்சகட்ட காட்சி அதாவது கிளைமாக்ஸ்.

( உண்மையான இறுதிப்பகுதி, நிச்சயம் நாளை வெளிவரும்.
அதுவரை என்னை அருள்கூர்ந்து மன்னித்திட வேண்டும் )

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. TR,பாலு.







வெள்ளி, 10 மார்ச், 2017

ஒரு கிழவனின் கதை !!



           ஒரு கிழவனின் கதை இது !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது 
இனிமையானதாக அமைந்திடவேண்டும் என 
எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொண்டு இந்தக் கதையை எழுதிடத் தொடங்குகிறேன்.

மானாமதுரை முன்பு ஒருங்கிணைந்த மதுரை 
மாவட்டத்தினுள் இருந்த அந்த சின்னஞ்சிறு 
நகரம், மாவட்ட பிரிவினைக்குபிறகு தற்போது 
முகவை என்று அழைக்கப்படுகின்ற இராமநாதபுரம்மாவட்டத்தினுள் உள்ளது.

அங்கே வாழ்ந்துவரும் ஓய்வுபெற்ற மாநில அரசு உயர்நிலை நிர்வாகியாக பொறுப்பு வகித்துவந்த நபர்தான் நமது கதையின் நாயகன் அவரது பெயர் திரு.பரந்தாமன் ஆகும்.

அவருக்கு நல்ல அழகான அமைதியான மனைவி இரண்டு குழந்தைகள். ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் ஆகும்.

ஓய்வு பெறுகின்ற வரை, திரு.பரந்தாமன் அவர்கள் உண்மையில் ஒரு கர்ஜிக்கும் சிங்கம் போலவேதான் வாழ்ந்துவந்துள்ளார். யாருடைய பேச்சையும் அவர் கேட்டு செயல் பட்டதாக வரலாறு இல்லவே இல்லை.

முக்கியமாக சொல்லிட வேண்டுமென்றால், மனைவி சொல்வதைக்கூட கேட்டு செயல்படாத ஒரு பிடிவாத குணம் கொண்டவர் ஆனாலும் உண்மையில் மிகமிக நல்லவர் பரந்தாமன். வயது ஏற ஏற முதுமையின் காரணமாகவும், அவரது தந்தை வழி பாரம்பரியத்தின் 
படி அவருக்கு வழுக்கை மற்றும் முடியின் இயற்கை கருப்பு நிறம் காணாமல் போய்விட வெள்ளைநிறத்தின்ஆதிக்கம் அதிகமாக, சுமார் 50 வயதினிலே 65 வயது தோற்றம் தெரியவந்தது. ஆனாலும் அதைப்பற்றி எல்லாம் சிந்திக்கவோ அல்லது அதை மறைத்திடவோ பரந்தாமன் எந்தவித முயற்ச்சியிலும் ஈடுபடாமல் தனது 
வேலையிலேயே முழு கவனமும் செலுத்தி வந்தார்.

மறைந்த அவரது தந்தை ஒரு அரசு அலுவலர் அவர் திடீரென மறைந்ததால், வாரிசு உரிமை அடிப்படையில் பரந்தாமன் அரசுப்பணியில் சேர்ந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது. எனவே பரந்தாமன், எப்போது யாரிடம் பேசிடும் பொழுதும், தனது தந்தையின் புகழ்,பெருமை, இவைகளைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்.

என்ன செய்வது, விதியின் கோர விளையாட்டில் உலக மாந்தர்கள் அனைவரும் பொம்மைகள்தானே இதற்கு பரந்தாமன் மட்டும் என்ன விதிவிலக்கா ?

( ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் கதை தொடரும்.......)

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. TR. பாலு.                                            (விளம்பர இடைவேளைக்குப் பின் கதை இங்கே தொடர்கிறது)


ஒரு கிழவனின் கதை....பகுதி எண்.2.

விதி தனது கொடிய கரங்களால் காரியங்களை செய்திட முற்படும்போது தனிஒரு மனிதனால் அதனைத் தடுத்து நிறுத்திடவா முடியும் ?


கால க்ரகச்சார் கான் குசானே சே !!

குதாய் க்யா கரேகா ?  !!


என்ற ஹிந்துஸ்தான் பழமொழிக்கு ஏற்ப நமது 

கதையின் நாயகன் திரு. பரந்தாமனின் வாழ்வு 

தாழ்ந்திடவேண்டும் என்பதுஅவரைபொறுத்த வரை 

அவரது விதி.  அதன் விளைவோ என்னவோ 

அவருக்கு கெட்ட நண்பர்கள் சகவாசம், ஏற்பட,

அதனால், இஸ்லாம் மதத்தில்சொல்லப்பட்டுள்ளது 

போல, சைத்தானின் மூன்று வலிமைமிக்க ஆயுதம் 

என்று சொல்லப்படும், மது,மாது,சூது, மூன்றும் 

பரந்தாமனின் அன்றாட செயல்பாட்டுடன் ஒன்று 

கலந்து உறவாடிட, அதுவரை, அவர், அரும்பாடு 

பட்டு சேர்த்து வைத்திருந்த செல்வங்கள் 

அனைத்தும் ஒன்றின்பின் ஒன்றாக, பரந்தாமனை 

விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்தது. அதை 

அறிந்திடும் அறிவு பரந்தாமனுக்கு இருந்தாலும் 

விதி அவரது ஆறாவது அறிவினை செயலிழக்க 

செய்தது என்னவோ உண்மையே. 2011ம்ஆண்டு 

நடைபெற்ற தேர்தல் முடிவுகளைப் பார்த்த, நம்   

தலைவர் கலைஞர் அவர்கள் சொல்லியதுபோல 

கூடா நட்பு கேடாய் முடிந்தது திரு. பரந்தாமனின்   

அறிவு அழிந்தது. செல்வம் தேய்ந்தது.ஆனந்தம் 

அவரது வாழ்வினை விட்டு பறந்தோடியது.அமைதி 

அழிந்தது. துயரம் கலந்தது. ஆணவம் ஒன்றாய் 

ஒழிந்தது.சங்க கால இலக்கியப் பாடல் ஒன்றில் 

சொன்னதுபோல :-

ஆங்காலம் !! மெய்வருந்த வேண்டாம் !!
போங்காலம் !! காட்டானை தின்ற கனியது போலாகுமாம் !!தேட்டாளன் தேடிய திரவியம் !!

பாடலின் பொருள் :-  அதாவது, ஒரு மனிதனின் நடப்பு காலம், நல்ல திசையில் செல்கின்றபோது அவர், எந்தவித உடல் உழைப்பினால், மெய் வருந்திடாமல் இருந்திடும்போதும் !! செல்வம் அவனிடம் வந்து சேர்ந்து, குவிந்து கொண்டே இருந்து கூத்தாடுமாம் !! ஆனால், அதே நேரம் அந்த செல்வங்கள், அனைத்தும் அவனைவிட்டு நீங்கிடும் வேளை வருகின்றபோது, காட்டினில் இருக்கும் விளாம்பழங்களை யானை அப்படியே முழுசாக உள்ள கனிகளை முழுங்கி உண்டுவிடுமாம். பின்பு மறுநாள் யானையின் கழிவுகளில் அந்த விளாம்பழ ஓடுகள், உடைந்திடாமல், அப்படியே முழுசாக காணப்படுமாம். ஆனால், உடைத்துப்பார்த்தால் உள்ளே எதுவும் இருக்காதாம். அதுதான் பாடுபட்டு பணத்தைத் தேடி, சேர்த்து வைத்திட்டவனின் செல்வமும்.திடீரென்று, இருப்பதுபோல தோன்றிய செல்வங்கள் அனைத்துமே இல்லாது போய்விடும். நமது கதையின் நாயகன் திரு. பரந்தாமன் வாழ்வும் அதற்கு இணையாகவே இருந்தது. என்னே விதியின் கொடுமை.

( இன்னும் கதை வரும்......ஒரு சிறு இடைவேளை அடுத்து....) 

வெள்ளி, 7 அக்டோபர், 2016

மிச்சம் இருக்கு ஒண்ணு !! இத நீங்க எடுத்துக்கிறீங்களா ? இல்ல..நான் எடுத்துக்க்கவா ? நகைச்சுவை சிறுகதை !!




          மிச்சம் இருக்கு ஒண்ணு !!



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

ஒரு நகைச்சுவை சிறுகதை உங்களுக்காக !!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அழகிய கிராமம்.அங்கே வாழ்ந்து வரும் குறுநிலக்கிழார் பெயர் குப்புசாமி. அளவான குடும்பம். வளமான வாழ்க்கை.நிறைய நஞ்சை,புஞ்சை நிலங்கள் அவருக்கு உண்டு. அதில் வரப்பு ஓரமாக தென்னை மரம் ஒன்றினை நட்டு அது இளநீர் காய்த்து பறிக்க வேண்டிய காலம். ஒரு கிளையில் 5 இளநீர் காய்த்து இருந்தது. அதைப் பறிக்க,இவர் வயதுமரம்ஏறஅனுமதிக்காததால், அவர் முத்துப்பாண்டி என்ற தொழிலாளியை அழைத்து மரத்தைக் காண்பித்து கேட்கிறார். இனி வருவது நேரலையில் ( LIVE) :-

குப்புசாமி :-  வாடா முத்துப்பாண்டி உன்னையைத்தான்டா தேடிக்கிட்டு கிடந்தேன்.

முத்துப்பாண்டி :- என்னங்க சாமி என்ன செய்யணும் சொல்லுங்க சாமி உடனே செய்றேன்.

குப்பு:- அது வேற ஒன்னும் இல்லடா. தெக்குப்பக்கம் ஒரே ஒரு தென்னை மரம் இருக்குல்ல அதுல ஐஞ்சு காய் கிடக்கு அதைப்பறிச்சுத் தரனும். உன்னால முடியுமால. சொல்லு. உனக்கு என்னடா கூலி வேணும் ? 
சும்மா கூச்சப்படாம கேளுரா பாண்டி.

முத்துப் :-  அட..என்னங்க..சாமி..இதுக்குப்போயி 
உங்கட்ட நான் என்னத்த கூலியைக் கேக்க. நான் 
முதல்ல காயைப்பரிச்சுதாறேன். பிறவு நீங்க 
பாத்துக்கூலியைத் தாங்க சாமி. அட..என்ன..நான் சொல்றது ?

குப்பு :-  அட..பைத்தியாரா. சரி..சரி..காயைப்பறி.
அப்பால பாத்துக்கலாம்.

(இப்படி முதலாளி சொன்னவுடன் முத்துப்பாண்டி 
மரமேறி அந்த அஞ்சு கையைப் பறிச்சு கீழே 
போட்டு தலைய சொறிஞ்சுக்கிட்டு இருக்கான்.

குப்பு :-  ஏல பாண்டி என்னடா தலைய சொறியுற. கேளுரா உனக்கு என்ன கூலி வேணும் ?

பாண்டி :- சாமி பொதுவா நான் மரம் ஏறி காயைப்
பறிச்சா, ஏறுவதற்கு 1 காய். இறங்குறதுக்கு 1 காய்புறவு நீங்களா கொடுக்கிறது 1 காய் அப்பால நானா எடுத்துக்குறது 1 காய். மிச்சம் ஒண்ணு இருக்கு சாமிஅதநீங்கஎடுத்துக்குரீங்களா..இல்.நான் எடுத்துக்கிடவா ? எனக்கு எப்பயுமே அதிக ஆசையெல்லாம் கிடையவே கிடையாது சாமி.

குப்பு :- அப்டியால நீ கெட்டிக்காரந்தாண்டா என் 
புத்திய செருப்பால அடிக்கணும்உன்கிட்ட உன்கிட்ட கூலி இம்புட்டுத்தான்னு  பேசாம 
காயப் பறிக்க சொன்னதுக்கு. அந்த மிச்சம் ஒரு 
காயையும் நீயே எடுத்துக்கல.( என்று சொல்லிவிட்டு கடுப்போடு வயக்காட்டை 
விட்டு வெளியேறினார் குப்புசாமி)

இந்தக்கதையின் நீதி :-  யாரிடம் நாம் வேலை 
வாங்கினாலும் கூலிய சரியாகப் பேசிட்டு பிறகே 
வேல செய்திட அனுமதிக்கணும். அரப்பேசி உறவாடு என்று அக்காலத்தில் ஒரு பழமொழி உண்டு)

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

புதன், 21 செப்டம்பர், 2016

புத்திசாலியான மகன் !! ( கற்பனை தான். Google+ல் வெளிவந்தது) Priya Suresh வெளியிட்டது.




படித்து சிரித்த கதை


எமதா்ம ராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.
அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது.
மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.
மகன் கொஞ்சம் வளா்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம தனக்குள்ள பயத்தையும் விளக்கினார்.
மகனே..நீ சிறந்த வைத்தியனாக வேண்டும். மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம்.
எப்படித் தொியுமா? ஒருவா் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவா் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன்.
மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீா் விட்டு எமதா்மன் நழுவி விட்டார்.
மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவா் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சா்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.
கொஞ்ச நாளில் அந்த ஊா் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி.
எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது?
பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா..அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே..இங்க இருக்கார்..என்று அலறினான்.
அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடிவிட்டான்.

பொண்டாட்டிடா!

நன்றி :- Priya Suresh அவர்களுக்கு !!

சனி, 17 செப்டம்பர், 2016

அப்பா என்றால் பாசமே இல்லாதவரா என்ன ?





அப்பா என்றால் பாசமே இல்லாதவரா என்ன ?




அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

உங்கள் அனைவருக்கும் மனங்கனிந்த காலை 
வணக்கங்கள்.

சில தவிர்க்க முடியாத காரணங்களால்,
கடந்த சுமார் 10 தினங்களுக்கும் மேலாக 
என்னால் வலை பதிவு வேலைகளில் 
ஈடுபட இயலவில்லை என்பதை என் அருமை 
வாசக நண்பர்களிடம் முதலில் தெரிவித்துக் 
கொள்ள கடமைப்பட்டுள்ளேன். அதற்காக 
என்னை மன்னித்து அருள்புரிய வேண்டுகிறேன்.

இன்றையதினம், நான் இங்கே பதிவுசெய்திட 
இருக்கும் தலைப்பு " அப்பா " சம்பந்தப்பட்டது.

ஏதோ அப்பா என்றால் அறவே அன்பு, பாசம் இல்லாதவர் போலவும் அன்பு மற்றும் பாசம் என்பது இங்கே முழுக்க முழுக்க அம்மாவுக்கு மட்டுமே ஒட்டுமொத்தகுத்தகைக்கு விடப்பட்டு உள்ளது என்றே காலம் காலமாக, நமது சமுதாயம் கருதிக்கொண்டு உள்ளது இதை உறுதியாக என்னால் ஏற்றுக்கொள்ள 
இயலவில்லை, என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கட்டுரை, என் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


அம்மாவிடம் அன்பு மற்றும் பாசம் இல்லவே 
இல்லை என்று நான் சொல்ல வரவில்லை என் 
அன்பு வாசகர்களே. 

ஆனால், அதே நேரம், அப்பாவின் அன்பும் பாசமும், இங்கே பலரது கண்களுக்கு ஏன்,
எதற்காக,தெரியாமல்போய்விட்டதுஎன்பதுதான் 
எனக்கு புரியவில்லை அன்பர்களே.

அது 1967 ம் ஆண்டு. சத்யா மூவிஸ் தயாரிப்பில் 
புரட்சி நடிகர் நடித்து வெளிவந்த ( மறைந்த நடிக 
வேள் M.R. ராதாவால் சுடப்பட்டு குணம் அடைந்த 
பின் MGR நடித்து வெளிவந்த படம் இது) கருப்பு 
வெள்ளை திரைப்படம் " காவல்காரன் " ஆகும்.

இதில், மறைந்த காவியக்கவிஞர் வாலி எழுதி 
மறைந்த T.M. சவுந்திரராஜன் பாடிய பாடல்தான் :-

" காது கொடுத்துக்கேட்டேன் !! ஆஹா குவா குவா சத்தம் !! இனி கணவனுக்கு கிட்டாது !! உன் 
குழந்தைக்குத்தான் முத்தம் !!

எனும் பாடல். இதில் வரும் இறுதிப்பகுதியில் ஒரு அருமையான கருத்து பதிய வைத்திருப்பார் வாலி.

அது என்னவென்றால் :-

குழந்தை பாரம் உனக்கல்லவோ !!
குடும்ப பாரம் எனக்கல்லவோ !!
கொடிஇடையின் பாரம் எல்லாம் 
பத்து மாதக் கணக்கல்லவோ !!
மனைவியுடன் குழந்தையையும் !!
ஒருவனாக சுமக்கின்றேன் !!
சுமப்பதுதான் சுமை என்று மனதுக்குள்ளே !!
ரசிக்கின்றேன் !!

என்று பாடல் நிறைவுபெரும். நான் எதற்கு 
இந்தப்பாடலை இங்கே குறிப்பிடுகிறேன் 
என்று கேட்டால் அன்பர்களே, பத்து மாதங்கள் 
சுமந்து குழந்தையைப் பெறுவதுடன் அங்கே 
தாயின் கடமை முடிந்து விடுகிறது. ஆனால் 
அந்தக் குழந்தையை சீராட்டி வளர்த்து படிக்க 
வைத்து பண்புள்ளவனாக ஆக்குவதில் தந்தையின் பாடு இருக்கிறதே !! அப்பப்பா சொல்லில் அடங்காது.


அப்பாவின் அருமையையும் பெருமையையும் 
விளக்கிடும் திரைப்படங்கள் எத்தனையோ 
வெளிவந்து இருந்தாலும்கூட, தாயின் அன்புக்கு 
ஈடாக அங்கே அப்பாவின் நிலை, இருக்க 
மறுப்பதைத்தான் நம்மால் காணமுடிகிறது 
அன்பு நேயர்களே.


கடந்த 17ம்தேதி ( 17-09-2016) தினமலர் நாளிதழில் வெளிவந்த ஒரு சிறுகட்டுரையை உங்களுக்கு தருகிறேன்.

அம்மா :- ( தனது மகனிடம் )
நானல்லாம்ஒழுங்காமாத்திரைபோட்டுக்கிறேன்உங்கப்பாதான் ரெண்டுநாளா இருமிகிட்டே 
இருக்கார். என்னன்னு கேட்டா, ஒண்ணுமில்லை 
என்றே சொல்லுகிறார். நீயாவது என்னன்னு 
கேளடா ? ( அம்மாவிடமிருந்து ஏக்கத்துடன் 
வந்தது அந்தக் கோரிக்கை)

மகன் :- அதெல்லாம் அவரே பார்த்துப்பாரு. நீ போயிப் படும்மா . ( இது மகனின் பதில்) (மனதுக்குள்) இந்தபதில் அம்மா எதிர்பார்த்ததுதான். அதனால் மேற்கொண்டு 
பேசாமல் கைபேசி இணைப்பைத் துண்டித்துக் 
கொண்டார் அம்மா தனது மகனிடம். 
வேலைக்காக நகரத்துக்கு வந்த இந்த பத்து 
ஆண்டுகளில், ஒரு நாள்கூட அம்மாவிடம் அலை பேசியில், உரையாடாமல் இருந்ததில்லை. ஆனால் அப்பாவிடமோ, ஒருநிமிட உரையாடல் மட்டுமே அதுவும்கூட மிகவும் அரிதாகத்தான் நிகழும்.

இதோ அம்மாவின் நினைவு வந்துவிடவே, ஊருக்கு கிளம்பினான்மகன்ஆட்டோவில்ரயில் நிலையத்துக்கு.

அப்போது ஆட்டோ ஓட்டுனருக்கு கைபேசியில் 
அழைப்பு வருகிறது.

ஆட்டோ ஓட்டுனர் :- ( தன்அப்பாவிடம்) நயினா வேலையில இருக்கப்ப கூப்பிடாதேன்னு உனக்கு எத்தனை வாட்டி சொல்றது ? நீயா போய்க்க்க. நானெல்லாம் வரமுடியாது.என்று கடித்துக்குதறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார் 
ஆட்டோ ஓட்டுனர். ஸாரி சார். ஒன்னும் தப்பா நீங்க எடுத்துக்காதீங்க. வூட்டுலே இருந்து அப்பாதான் பேசினாரு.அவரு உடம்புக்கு முடியலையாம். அதான் ஆஸ்பத்திரிக்கு 
கூட்டிப் போகச்சொல்றாரு. காலைலே இருந்து ஒரே இம்சை சார். பொம்பளயா இருந்தா, கூட்டிப்போலாம்.பெரிய மனுசன் அவராவே போய்க்கிட வேண்டியதுதானே என்ன சார் நான் சொல்றது. ( இது ஆட்டோ ஓட்டுனரின் 
தன்நிலை விளக்கம்) அதெல்லாம் அவரே பாத்துப்பாரு நீ போய்ப்படு என்று தான் சொல்லியதை இவனுக்கு நினைவு 
படுத்தியது.

ரயிலின் மேல் படுக்கை இவனுக்கு. 60 வயது மதிக்கத்தக்க தம்பதிகள், கீழ் படுக்கையில் இருந்தனர். அப்போது அந்தப் பெரியவர் தனது மனைவியிடம் :- என்ன உன் புள்ளைட்டே சொல்லிட்டியா ? காலைல ஸ்டேசனுக்கு 
வரச்சொல்லி ? ( இது பெரியவரின் கேள்வி)

பெரியவர்மனைவி :-  ஏன் அத நீங்களே சொன்னா என்ன ?

பெரியவர் :- நான் சொன்னாத்தான் அவன் காதுலேயேவாங்க மாட்டானே !! அம்மாவுக்கு மட்டும் வயசாச்சுன்னு நம்புறவனுக்கு அப்பாவுக்கும் வயசாச்சுன்னு தெரியல. 
நீ சொன்னாத்தான் வருவான். நான் சொன்னா அவன் பேசாம ஆட்டோவைப் புடிச்சு வாங்கன்னு ஒத்த வரிலே சொல்லிருவான். இந்த வயசுலே சக்கரை வியாதியவச்சுக்கிட்டு நான் எங்க ஆட்டோவைப் புடிக்க ( என்று கண்ணில் நீர் மல்க பெரியவர் புலம்பியதும்) அவர் மனைவி, தனது மகனுக்கு போனில் தகவல் சொன்னாள்.

அந்த நொடியில் என் எண்ண ஓட்டங்கள் அப்பாவைப்பற்றி மட்டுமே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. கடைசியாகஅவருக்கு உறுதுணையா இருந்தது எப்போது ? என்று 
அறிய தன் கடந்தகால நினைவுகளை பள்ளிப்பருவ காலம் வரை ஓட விட்ன்டான். எந்தவிதமான சுவடும் இல்லை. 

பெண் என்பதாலோ, இல்ல பத்து மாசம் 
சுமந்து பெத்தவ என்பதாலோ, அம்மாக்கள் மீது 
இயல்பாகவே நமக்கு அன்பும் பாசமும் வந்து விடுகிறது.

ஆனால், அதே சமயம், அப்பாக்கள் மீதான அன்பை அவர்களிடம் நாம் காட்டிக் கொள்வதேயில்லை.அவர்களுக்கானதை அவர்களாகவே செய்து கொள்வார்கள், என்று நாமாகவே நமக்குகற்பிதம் செய்துகொண்டோம். எப்பேர்பட்ட தவறு இது என்று அப்போதிருந்தே என் உள்மனம் எனக்குள் அரிக்கத் தொடங்கி விட்டது.

உடனேயே அப்பாவைப்பார்த்து, என்னாச்சுப்பா ?
உடம்புக்கு ? என கேட்க  வேண்டும் என்று எனக்குத்தோன்றியது. விடியலை எதிர்பார்த்து, மனதை அடக்கிக்கொண்டேன். ரயில் விரைந்து எனது ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

( நன்றி :- தினமலர். 17.09.2016)

******************************************************

என்ன நேயர்களே !!

படித்தீர்களா ? அந்த மகனுக்கு தந்தையின் பெருமை நாலு பேர் சொன்னதற்குப் பிறகுதான் தெரிகிறது.

என்னதான் மண்ணால்தான் செடி, கொடி வளர்கிறது என்று சொன்னாலும், விதை என்ற ஒன்று இல்லாமல் எப்படி செடி கொடிவளரும் ?

எனவே தந்தையை மதிப்போம். அப்பாவிடம் அன்பு செலுத்துவோம்(இனிமுதற்கொண்டாவது )


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். மதுரை. T.R. பாலு.




ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

இதுக்கு ஒங்க அப்பனையே கட்டியிருக்கலாம் !! ( ஒரு புது மணப்பெண்ணின் மனக்குமறல் கதை )






இதுக்கு ஒங்க அப்பனையே கட்டியிருக்கலாம் !!




நாட்டரசன் கோட்டை.  தமிழகத்தில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு வரைமுறை வகுத்து அதன்படி வாழ்ந்து வரும் செட்டிநாட்டு இரத்தினங்கள் இருக்கும் ஊர் அது.

அங்கு வசித்து வருபவர் சு.பனா.கதிரேசன் செட்டியார்.அந்தக்காலத்தில் பர்மாவில் கடுமையான உழைப்பில் பணம் சம்பாதித்து, அதை நமது நாட்டில் கொண்டுவந்து 
லேவாதேவி தொழில் உட்பட பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டு பலகோடிகள் சம்பாதித்தவர் அவர். மனைவியை இழந்தவர். அவருக்கு ஒரே செல்வ புதல்வன் பெயர் பரமசிவன். அப்பாவின் கட்டுப்பாட்டில் வளர்க்கப்பட்டவன். வெளியுலகத் தொடர்பு, நண்பர்கள் என்று எதுவும் தெரியாமல் தந்தை 
மட்டுமே உலகம்என்றுவளர்ந்தவன்வாழ்ந்தவன்.

பருவ வயதை அடைந்துவிட்டதை அறிந்த தந்தை அவனுக்கு கானாடுகாத்தான் அருணாச்சலம் செட்டியார் அவர்களின் அருந்தவப் புதல்வி செல்வி. பரிமளாவை 
ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் செய்து வைத்தார் தந்தை கதிரேசன் செட்டியார்.

தடபுடலாக நடந்து முடிந்தது திருமணம். அன்று இரவு புது மணமக்களுக்கு முதலிரவு. கையில் வெள்ளிப்பால் செம்போடும், மனதில் எண்ணற்ற ஆசைகளோடும் அறைக்குள் நுழைந்தாள் மணப்பெண் பரிமளா.

உள்ளே வந்தவுடன் தனது கணவனின் காலைத்தொட்டு வணங்கினாள். பிறகு பாலை ஊற்றிக் கொடுத்தாள் பால் மனம் மாறாத தனது   பர்த்தாவிற்கு. 

அப்போது பரிமளா தனது கணவனிடம் ( இனி வருவது நேரலை--LIVE)


பரிமளா :-  ( நாணத்துடன்) ஏங்க..நமக்கு தேன் நிலவு எந்த இடத்துலே ? நான் தெரிஞ்சுக்கலமா?

பரமசிவன் :கொஞ்சம்இரு.நான்என்அப்பாகிட்டே 
கேட்டு சொல்றேன்.

பரிமளா ;- சரிங்க. நாம என்னைக்கு கிளம்புவோம் ?

பரம:-  கொஞ்சம் இரு. நான் என் அப்பாகிட்டே கேட்டு சொல்றேன்.

பரிமளா :- ஆகட்டுங்க. நாம எதுலே போறோம் ?
காரிலேயா இல்ல பஸ்ஸா ?

பரம :-  கொஞ்சம் இரு. நான் என் அப்பாகிட்டே கேட்டு சொல்றேன்.

பரிமளா :- ( கடுப்புடன்) ஏங்க. எதுக்கு எடுத்தாலும் உங்க அப்பாகிட்டே கேட்டு சொல்றேன். அப்பா கிட்டே கேட்டு சொல்றேன் அப்டீன்னு சொல்றீங்களே ? ஏன் அப்படி ?

பரம :-  நான் எது செஞ்சாலும், எங்கே போறதுன்னாலும் எங்க அப்பாகிட்டே கேட்டுத்தான் செய்வேன். போவேன்.
எனக்கு என் அப்பாதான் உலகம் உயிர் எல்லாமே.

பரிமளா :-  ( வெறுப்புடன் ) அப்படிங்களா. இப்டின்னு முதல்லேயே எனக்குத் தெரிஞ்சிருந்தா உங்களை கண்ணாலம் கட்டிருக்கறதுக்கு பதிலா ஒங்க அப்பனையே 
கட்டியிருக்கலாம்.

பரம :-  ?????????????????????????

நன்றி !! வணக்கம் !!

அன்புடன் மதுரை. T.R. பாலு.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

அடக்கம்,பணிவு, மரியாதை,இது எதுவுமே இல்லாமல் பணம் கடன் வாங்கிடச் சென்றவரின் கதை !!










பணம்கடன் வாங்கச் சென்றால் நமக்குத் தேவை  அடக்கம்,பணிவு மரியாதை, அவசியம் வேண்டும் !!








அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


அனைவருக்கும் வணக்கம். இன்றையதினம் 
இந்த வலைதளத்தினால் நான் மதுரை நகரில் வசித்தபோது நடைபெற்ற ஒரு உண்மைச்சம்பவம் ஆகும்.



நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு அந்தக் 
கால வசதிகளோடுகூடிய திரையரங்குதான்

"சென்ட்ரல்" சினிமா என்று அழைக்கப்பட்டது.

இதற்கு மூன்று பங்குதாரர்கள் இருந்தனர்.

ஒருவர் யாதவ வகுப்பையும் மற்றொருவர் 

பிள்ளைமார் இனத்தையும், இன்னொருவர் 

சௌராஷ்டிரா குலத்தைச் சேர்ந்தவரும் 

ஆவார்கள். பெரும்பாலும் M.G.R.  மற்றும் 

சிவாஜிகணேசன் நடித்த புத்தம்புதுத் திரைக் 

காவியங்கள் இந்தத் தியேட்டரில்தான் திரை 

இடப்படுவது வழக்கம். அப்போது திரையரங்கு 

சீர்செய்திடும் வேலைகளுக்கு பணம் தேவைப் 

பட்டதால் அதற்கு பணம் கடனாக வட்டிக்கு 

வாங்கிடப் புறப்பட்டார் அதன் பங்குதாரர்களுள் 

ஒருவரான மறைந்த N.கண்ணாயிரம் பிள்ளை 

தேவகோட்டை நகருக்கு.  


அங்கே திரு அரு.லெட்சுமணன் செட்டியார் என்பவர் பெருத்த அளவில் லேவாதேவி தொழில் செய்து வந்தார்.அவரிடம் சென்ற மறைந்த N.கண்ணாயிரம் பிள்ளை செட்டியார் வீட்டில் இருந்த முகப்பு அறையில் இருந்த சோபாவில் ராஜாவைப்போல அமர்ந்து கொண்டு தனது இரண்டு கைகளையும் இரண்டு 

பக்கங்களிலும் லாவகமாக வைத்துகொண்டார்.

அப்போது செட்டியார் மாடியில் இருந்து முகப்பு 

அறைக்குள்ளாக பிரவேசித்தார். அவருக்கு ஒரு 

மரியாதை செய்திடும் நிமித்தமாகக்கூடபிள்ளை 

எழுந்துநின்று வணக்கம் தெரிவிக்கவில்லை.



அதற்குப் பதிலாக செட்டியார் வணக்கம் 

தெரிவிக்க பிள்ளையிடம் கேட்டார் என்ன 

விஷயமாக இங்கே தாங்கள் வந்துள்ளீர்கள் 

என்று வினாவிட, அதற்கு கண்ணாயிரம் 

பிள்ளையின் அலுவலக மேலாளர் 

சிவசங்கரன் பிள்ளை, பணம் தேவைப்படும் 

அந்த விஷயத்தினைச் சொல்லிட, செட்டியார் 

எவ்வளவு என ஜாடையில் கேட்க, பிள்ளை 

அவர்கள் தனது இரு விரல்களைக் காட்டி இரண்டு லட்சங்கள் தேவை என்று சொன்னார். உடனே செட்டியார் அப்படியா ?சரி !! தரலாம் என்று சொல்லிவிட்டு வட்டி இதற்கு தாங்கள் எவ்வளவு தருவீர்கள் என்று கேட்க அதற்கு பிள்ளை அவர்கள் வட்டியைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என்று சொல்ல, உடனே செட்டியார் நான் உங்களுக்கு போனில் தகவல் தெரிவிக்கிறேன் என்று சொன்னார். நன்றி வணக்கம் என்றுகூட பிள்ளை செட்டியாரிடம் சொல்லாமல் மதுரைக்கு கிளம்பினர்.



இவர் ஊருக்குப் போய் சேர்வதற்குள் செட்டியார் 

போனில் பணம் இப்போதைக்குத் தர இயலாது 

என்று சொல்லி விட்டார். காரணம் 

என்னென்றால் முதலில் பணம் கேட்டு 

வந்தவரிடம் மரியாதையை தெரிவிக்கத் 

தெரியவில்லை என்பது முதல் காரணம். 


இரண்டாவது காரணம் வட்டியைப் 
பற்றிக் கவலை இல்லை என்று சொன்னது. 

இந்தக் கவலை இல்லாதவரிடம் பணம் 

கொடுத்தால் அது அசலுக்கு ஆபத்து 

என்று செட்டியாரின் தந்தை உபதேசம் 

செய்துவிட்டு சென்று உள்ளது. 


காரணம் மூன்று நன்றி வணக்கம் போய் 
வருகிறேன் உங்களது பதிலுக்குக் 

காத்திருக்கிறேன் என்றுகூடச்சொல்லாதது. 


ஆக, நாம் இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில், நாம் 

யாரிடம் வட்டிக்கு பணம் கெட்டுச் சென்றாலும் 

மேலே சொன்ன மூன்று விஷயங்களையும் 

மனதில் நிலைநிறுத்தி நடந்து கொள்ள 

வேண்டும் என்பதே.




நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R பாலு..